பிரித்தானியாவில் அடுத்த வியாழக்கிழமை முதல் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

Keerthi
4 years ago
பிரித்தானியாவில் அடுத்த வியாழக்கிழமை முதல் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

அடுத்த வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்  நீக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வீட்டில் இருந்தவாறு பணியுரியுமாறு ஊழியர்களை இனி அரசு அறிவுறுத்தாது என்றும் அவரவர் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சுய தனிமைப்படுத்தல், கொரோனா ஹெல்த் பாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாவும், வரும் வாரம் முதல் பொது இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4