புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #exam
Nila
4 years ago
புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள 5ம் தர புலமை பரிசில் பரீட்சைகளுக்கான நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பரீட்சைக்கான நேரத்தை அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஆணையாளர் காயத்திரி அபேகுணசேகர கருத்து வெளியிட்ட போதே, இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்காக வழங்கப்பட்ட நேர எல்லையே, இம்முறையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

புலமை பரிசில் பரீட்சையின் பகுதி 01 பத்திரத்திற்கு 45 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்த கால எல்லையை, 2020ம் ஆண்டு ஒரு மணித்தியாலமாக அதிகரித்ததாகவும் அவர்  தெரிவித்தார்.

இதன்படி, முதல் பகுதிக்கு ஒரு மணித்தியாலமும், இரண்டாவது பகுதிக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4