தனுஷ் குடும்பத்தை பிரித்தது இந்த பிரபல மீடியாவா?

#Cinema #TamilCinema #Actor
Reha
2 years ago
தனுஷ் குடும்பத்தை பிரித்தது இந்த பிரபல மீடியாவா?

தமிழ்நாட்டு சினிமாவில் மாத்திரமல்ல பொலிவூட் சினிமாவிலும் பேசப்படும் சோகமான செய்தி தனிஷ் குடும்ப விவாகரத்தாகும். இச்செய்தி ரஜனி குடும்பத்துக்கு மட்டுமல்ல முழு இந்திய சினிமா பிரபலங்களையும் சோகத்தில் உள்ளாக்கியது.

இந்திய பிரதமர் மோடிகூட ரஜனியுடன் விடயத்தை விசாரித்ததாக கூறப்படுகிறது.
சரி விடயத்துக்கு வருவோம்.

மற்ற சினிமா குடும்பத்துக்குள் நடக்காத ஒன்று இவர்கள் குடும்பத்துக்குள் நடக்கவில்லையாம். சாதாரணமான ஒரு நடிகனின் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சேர்ந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகைகளின் நெருக்கமான நடிப்பால் வரும் சாதாரண பிரச்சனையே இது.

அதுவே புரிந்துணர்வில்லாத சில வேளைகளில் வாய்தர்கமாக மாறி, வார்த்தைகளை இடம் பொருள் பார்காமல் அள்ளிக்கொட்டியதாலும், நடிகைகளோடு இணந்து படத்துக்கு எடுத்த சில புகைப்படங்ளையும், சில பார்ட்டிகளில் மதுபோதையில் கட்டியணைத்த காட்சிகளையும் ஊடகங்கள் பொறுக்கி எடுத்து அணைந்த நெருப்பை தமது ஊடகத்துக்கு வருமானத்தை அதிகரிக்க இவர்களை சீண்டியதே.

தனுஷ் தம்பதிகள் மறந்த சம்பவங்களையும் ஞாபக‌ப்படுத்தி கும்மியடிப்பதால் தான் அவர்களிடையே ஏற்பட்டது விவாகரத்து.

மேலும்  தனுஷின் திருமணமே ஒரு விபத்தாம், தனுஷின் சகோதரியிடம் சென்றுவந்த ஐஸ்வர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட நெருக்கம் அவர்களை திருமணம் செய்து வைக்குமளவுக்கு ரஜினி தள்ளப்பட்டதாகவும். அதற்க்குள்ளும் மீடியாக்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளது.

அத்தோடு அனைத்து வசதியான குடும்பங்களுக்குள்ளும் இருப்பதுபோல சிறு வயதில் சில காதலர்களை தாண்டி வந்ததால் ஏற்பட்ட சில ஓடியோக்களும் அவரின் விவாகரத்துக்கு காரணமாம். 

அத்தோடு பொல்லை கொடுத்து அடி வாங்கியதுபோல அவர் தனது கணவனை வைத்து இயக்கிய திரைப்படமும் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமாம்.

இருவருக்குமிடையில் அடிக்கடி கருத்து மோதல் மற்றவர்கள் போலவே இருந்ததாகவும், ஊடகங்களே அவர்கள் பிரிவை தூசி தட்டி வாங்கிக் கொடுத்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் இருவரின் பிரிவு இருவரின் வாழ்க்கைக்கு நல்ல விடயம் எனவும் சிலர் கருத்துரைத்துள்ளனர். காரணம் தனுஷ் குடும்பத்தோடு ரஜினி குடும்பத்துக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஆகாதாம். அதுவும் தனுஷிற்க்கு மிக கவலையை கொடுத்திருப்பதாகவும், அதனால் தனுஷ் குடும்ப உறவில் கூட திருப்தியற்று வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு ஐஸ்வர்யா எப்பொழுதுமே தான் ஒரு பிரமுகரின் மகள் என்பதை தனது பிடிவாதத்தில் காட்டியதும், தனுஷிற்க்கு கவலையை ஏற்படுத்தியதாகவும், தனுஷ் அதிகமாக மதுவுக்கு அடிமையானதுக்கும், அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து அவரின் தேவையற்ற தொடர்புகளுக்கும் காரணம் எனவும், அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஊடகங்கள் தேவையற்ற முறையில் உபயோகிக்க மேலும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது.

இருவரும் ஊடகங்களில் வரும் வதந்தியை வதந்தி, கிசுகிசு என எடுக்காமல், தமக்குள்ளே விவாதமாக்கி தாமே தமது பிரச்சனையை அதிகரித்துள்ளனர்.

ஒரு சினிமா குடும்பத்துக்குள் வராத பிரச்சனை இவர்களுக்குள் வரவில்லை. இவர்கள் அதனை எப்படி எடுக்கவேண்டுமோ அப்படி எடுத்திருந்தால் பிரச்சனை எப்போவோ முடிந்திருக்கும். அத்தோடு தனுஷின் சாதகமே எப்பொழுதும் சர்சைக்குள் மாட்டுவதும், அடுத்த நடிகைகளின் குடும்ப பிரிவுக்கு இவரே காரணம் என ஊதி எரிய வைத்து இப்பொழுது குடும்பம் தெருவில் நிற்கிறது.

எது எதுவாகவிருந்தாலும் இவர்கள் மறந்த வதந்திகளை ஞாபகப்படுத்தி இவர்களை தூங்கவிடாது கதவைத் தட்டி தமது பிழைப்பை நடாத்தும் ஊடகங்களே. அதுவும் ஒரு முக்கியமான ஊடகமே அதிக மும்மரமாக இருந்து செய்திகளை கோணம் கோணமாக இருந்து முன்னிலையில் இவர்களைப் பிரித்தது என்பதில் ஐய்யமில்லை.

நடிகனோ யாரோ அவர்களின் குடும்ப பிரச்சனையை சமூக அக்கறையோடு நின்று அணுகி அவர்களின் வாழ்விற்க்கு உதவாமல் இப்படி ஊடக விபச்சாரம் செய்யும் ஊடகங்களை கண்டனத்தோடு கண்டிக்கின்றோம்.

ஊடக தர்மத்தை மீறும் ஊடகங்களை தடை செய்ய ஒரு சரியான சட்டத்தை தமிழக அரசு செய்ய முன்வரவேண்டும். இப்படியான உண்மையோ வதந்தியோ அதனை வெளிப்படுத்தவேண்டியதை வெளிப்படுத்தி, மறைக்கவேண்டியதை மற்றவர்களின் நன்மை கருது மறைத்து சமூக சேவை செய்வதே ஊடக தர்மமாகும்.

எப்போது ஊடகங்கள் இதை கடை பிடிக்கிறதோ அப்போதான் உலகமே சமாதானம் கொள்ளும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!