இரும்புக் கம்பியால் தாக்கி குடும்பஸ்தர் படுகொலை!

Prabha Praneetha
4 years ago
இரும்புக் கம்பியால் தாக்கி குடும்பஸ்தர் படுகொலை!

பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்கொடை தோட்டத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருக்கொட தோட்டம், உடு கும்பல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் தாக்குதலில் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4