இங்கிலாந்தில் பெற்ற தாயை கொன்று விட்டு. இணையத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மகள்..

Keerthi
4 years ago
இங்கிலாந்தில் பெற்ற தாயை கொன்று விட்டு. இணையத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மகள்..

இங்கிலாந்தில் பெற்ற தாயையே கொடூரமாக கொன்ற மகளுக்கு 17 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள Longsight என்ற நகரைச் சேர்ந்த 58 வயதுடைய Beverley என்ற பெண்ணை அவரின் மகள் Cassandra Scott, கடந்த வருடம் கொடூரமாக கொன்றிருக்கிறார். அதாவது, Cassandra Scott தன் காதலனிடமிருந்து பிரிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தன் தாயுடன் வசித்திருக்கிறார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த Cassandra Scott, தன் தாயின் முதுகில் 10 தடவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். அதன்பின், உடலை துணி வைத்து சுற்றி பீரோவில் அடைத்து வைத்திருக்கிறார்.

அனைத்து ஆதாரங்களையும் அழித்து விட்டு, வீட்டிற்கு புதிதாக பெயிண்ட் அடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தாயின் பிறந்தநாள் அன்று இணையதளத்தில் வாழ்த்துக்களும் பதிவிட்டிருக்கிறார். மேலும் தன் சகோதரி மற்றும் அண்டை வீட்டாரை நம்ப வைக்க அவரே தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறார்.

மருத்துவமனையில் தாய் பலியானதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இதனை அவரின் அக்கம்பக்கத்தினர் நம்பவில்லை. அவர்கள் அளித்த புகாரின்படி, காவல்துறையினர் வீட்டை பரிசோதித்த போது அவரின் தாய் உடல் மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, Cassandra Scott-வை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, என் தாயை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆத்திரத்தில் தெரியாமல் கொலை செய்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார். இந்நிலையில், நீதிமன்றத்தில் அவருக்கு 17 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4