ஒஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலுக்குள் நுழைந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம்

Prabha Praneetha
4 years ago
ஒஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலுக்குள் நுழைந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள 94ஆவது ஒஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் கடந்த ஒஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4