அமெரிக்காவில் 125 பாம்புகள் சூழ இறந்து கிடந்த நபர்...பின்னணியில் நிலவும் மர்மம்

Keerthi
4 years ago
அமெரிக்காவில் 125 பாம்புகள் சூழ இறந்து கிடந்த நபர்...பின்னணியில் நிலவும் மர்மம்

அமெரிக்காவில், 125 கூண்டுகளில் நச்சுப்பாம்புகள் சூழ்ந்திருக்கும் தனது வீட்டில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

அமெரிக்காவிலுள்ள Pomfret என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் David Riston (49) என்பவர் வாழ்ந்துவந்துள்ளார்.

புதன் கிழமை இரவு, அவரது பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் அவரைக் காணச் சென்றிருக்கிறார். முந்தைய தினம் அவரைப் பார்க்காததால் Davidக்கு என்ன ஆயிற்று என்று அறிவதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற அவர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க, வீட்டுக்குள் David பேச்சுமூச்சில்லாமல் தரையில் கிடப்பதைக் கண்டு பொலிசாரை அழைத்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த பொலிசாருக்கும், அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், David வீட்டுக்குள் 125 கூண்டுகளுக்குள் பல்வேறு வகை பாம்புகள் இருந்திருக்கின்றன. அவற்றை உணவளித்து வளர்த்துவந்திருக்கிறார் David.

அவற்றில், எதிரே வருபவரின் கண்களில் விஷத்தைக் கக்கக்கூடிய spitting cobra, பயங்கர விஷமுடைய black mamba போன்ற பாம்புகளும் அடக்கம். இந்த பாம்புகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

இந்நிலையில், David தான் வளர்த்த பாம்புகளாலேயே கொல்லப்பட்டாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், David தனது வீட்டை ஒரு பாம்புப்பண்ணையாக மாற்றிவைத்திருந்தது தங்கள் யாருக்கும் தெரியாது என்கிறார்கள் அக்கம்பக்கத்தவர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4