'Omicron' ஆபத்தான 14 அறிகுறிகள்?. சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!!

Keerthi
4 years ago
'Omicron' ஆபத்தான 14 அறிகுறிகள்?. சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட "ஒமிக்ரான்" வைரஸ் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதாரத்துறை மக்களுக்கு ஒமிக்ரான் வைரசின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரானின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் :-

  • ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்மை அறிகுறியாக 73 சதவீதம் பேருக்கு 'மூக்கு ஒழுகுதல்' காணப்பட்டுள்ளது. அதேபோல் 68 சதவீதம் பேருக்கு தலைவலியும், 30 சதவீதம் பேருக்கு குளிரும், 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 28 சதவீதம் பேருக்கு தலைசுற்றலும் ஏற்பட்டுள்ளது.
  • ஒமிக்ரானின் அறிகுறிகளாக 64 சதவீதம் பேருக்கு உடல் சோர்வும், 60 சதவீதம் பேருக்கு தும்மலும், 60 சதவீதம் பேருக்கு தொண்டையில் தொற்றும், 44 சதவீதம் பேருக்கு இருமலும், 36 சதவீதம் பேருக்கு தொண்டை கட்டுதலும் ஏற்பட்டுள்ளது.
  • அதேபோல் 24 சதவீதம் பேருக்கு மூளை மழுங்கி போதல், 23 சதவீதம் பேருக்கு சதை பிடிப்பு, 19 சதவீதம் பேருக்கு வாசனை இழப்பு, 19 சதவீதம் பேருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
  • அதோடு மட்டுமில்லாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் "மூக்கு ஒழுகுதல்" அதிகம் பேருக்கு காணப்பட்டுள்ளது. அதேபோல் நெஞ்சு வலியும் ஒரு சிலருக்கு அறிகுறியாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4