காணாமல் போன மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
காணாமல் போன மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிபதற்காகச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் (வயது 37), தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (21) காலை மீன்பிடிப்பதற்காகச் சென்றிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலையே கரை திரும்ப வேண்டிய அவர்கள் நேற்று(22) வரை கரை திரும்பாமை தொடர்பில் குடும்பத்தாரால் பொலிஸ் நிலையத்திலும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கும் இது குறித்த தகவல் வழங்கப்பட்டதுடன் கரையிலிருந்தும் தேடுதலுக்காக மீனவர்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதி மீனவர்கள் கரையில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவர்களின் தகவலின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிலைகொண்டுள்ள கடலின் தொலைவின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கரை திரும்ப எட்டு மணிநேரம் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4