இளவயது காதலால் நடந்த கொடூர கொலை

#Police
Prathees
4 years ago
இளவயது காதலால் நடந்த கொடூர கொலை

கடவத்தையில் இளைஞர் ஒருவர் கண்ணாடித் துண்டால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடவத்தை அன்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை பகுதியிலுள்ள வாடகை அறையொன்றில் நேற்று (22ஆம் திகதி) காலை ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கடவத்தை, கோனஹேன பகுதியைச் சேர்ந்த 20 வயதான ராஜு மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

19 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கண்ணாடித் துண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிமியே வாடகை அறையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை அவரது  முதல் காதலனுடன் பார்த்தே  இளைஞன், இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸாருக்கு மேலும் தெரியவந்துள்ளதாவது, 

நேற்று முன்தினம் இரவு கடவத்தையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு அவர் தனது முதல் காதலனைப் பார்த்து மீண்டும் உறவைத் தொடர்ந்துள்ளார்.

பின்னர் இருவரும் அவள் தங்கியிருந்த வாடகை  அறைக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்டதும் கொலையை செய்த வாலிபர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி  தங்கியிருந்த விடுதிக்கு வந்துள்ளார்.

இருவரையும் கண்டதும் ஆத்திரமடைந்த இளைஞனே தாக்குதல் நடத்தியுள்ளார்.

சிறுமி நன்னடத்தையில் இருந்து தப்பி வாடகை அறையில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர், கொலை நடந்த விதம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4