முல்லைத்தீவில் இருந்து மஹரகம நோக்கி  பயணித்த பஸ் விபத்து!  ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில் 

#Accident
Prathees
4 years ago
முல்லைத்தீவில் இருந்து மஹரகம நோக்கி  பயணித்த பஸ் விபத்து!  ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில் 

பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - கொழும்பு வீதியில் ரத்மல்கொட பிரதேசத்தில் இன்று (23) காலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் முல்லைத்தீவில் இருந்து மஹரகம நோக்கி பயணித்துள்ளது.

பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 10 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4