வினாத்தாள் வௌியானதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

Mayoorikka
4 years ago
வினாத்தாள் வௌியானதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2021 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரங்கள், முன்பாகவே வௌியானதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையில் மாணவர்களிடம் வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், சில வினாத்தாள்கள் நிழற்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.

இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4