தாயின் அஸ்தியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த மகன் கைது!

Prathees
4 years ago
தாயின் அஸ்தியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த மகன் கைது!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்த தனது தாயின் அஸ்தியை வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்திய 52 வயது நபர்  அவற்றை எடுத்து பார்சலில் கட்டி தனது அலுவலகத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ராஜகிரிய நாவல வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 3வது மாடியில் இயங்கி வரும் தனியார் நிறுவனமொன்றுக்கு எடுத்துச் சென்று வரவேற்பாளர் இருந்த இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகளின் உரிமையாளர் காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​எலும்புகள் மற்றும் சாம்பல்கள் காணப்படுவதைக் கண்டு பதற்றமடைந்த வரவேற்பாளர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளார்.

கிடைத்த தகவலின் பிரகாரம் வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டபோது  உரிமையாளர்  சம்பவ இடத்திற் வருகை தந்துள்ளார்.

போகொல்லஇ ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த குறித்த நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் 52 வயதுடை நபர்,  இன்று கடமைக்கு வந்தவுடன் பொதியை விட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சடலத்தை பொதி செய்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தாயின் எலும்புகள் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தான் வணங்குவதாகவும், தன் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் தாயின் இழப்பை தாங்க முடியாமல் தான் அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

பொதுவாக மயானத்தில் அஸ்தி கொடுக்கப்படும் ஆனால் எலும்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பது குறித்து விசாரித்த போது, மீதமுள்ள சில உடல் உறுப்புகள் சுடுகாடு ஊழியர்களிடம் சிறப்பாகக் கோரப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வெலிக்கடை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4