கண்களின் மொழி - கண்களைப் பற்றி முழுமையான விபரங்கள்
1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது,
2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது,
3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை காட்டுகிறது,
4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது,
5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது + ஆசைப்படுகிறது,
6. கண்கள் சுருங்கினால் சந்தேகம்,
7. கண்கள் கூர்ந்து பார்த்தால் அதை விரும்புகிறது,
8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் வேண்டாம் என்று தவிர்க்கிறது,
9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் அது பதட்டத்தில் உள்ளது,
10. கண்கள் படபடத்தால் அதிகமாக விரும்புகிறது, அதாவது வெட்கப்படுகிறது,
11. கண்கள் மூக்கைப்பார்த்தால் அது கோபப்படும்,
12. கண்கள் எதை திரும்ப திரும்ப பார்க்கிறதோ அதை நேசிக்கிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் அது காமம் நினைக்கிறது,
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் அவரை காதலிக்க துடிக்கிறது,
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது,
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை நினைக்கிறது,
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் முழிக்கிறது,
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது,
19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ பயந்து தேடுகிறது,
20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் உங்களை மட்டுமே விரும்புகிறது,
21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் எதையோ தேடுகிறது,
22. கண்களை கைகளால் மறைத்தால் அது வெட்கப்படுகிறது,
23. கண்களை கைகள் கசக்கினால் அது ஆதரவு கேட்கிறது,
24. கண்கள் சரசரவென மூடித்திறந்தால் அது உங்களை வெறுக்கிறது,
25. கண் புருவங்கள் உயர்ந்தால் அது உங்களிடம் பேச துடிக்கிறது,
26. கண் புருவங்கள் சுருங்கினால் அது உங்களிடம் பேச விருப்பமில்லை,
27. கண்களும் புருவங்களும் சுருங்கினால் அது உங்கள் மீது கோபம் கொள்கிறது,
28. ஒரு கண் திறந்து ஒரு கண் மூடினால் அது உங்களிடம் சேட்டை குறும்புத்தனம் செய்கிறது,
29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் அது சற்றே ஓய்வெடுக்கிறது அதாவது தூக்கம் வருகிறது,
30. கண்கள் நீண்ட நேரமாகியும் விழிக்கவில்லை எனில் "அய்யோ பாவம்" அது இறந்துவிட்டது, மரணத்தை தேடிக்கொண்டது.