25.01.2022 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: புத்துணர்ச்சி பெருகும். பிறரது நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பரணி: குடும்பத்தில் ஒருவருக்கு நல்ல செய்தி வரும். உற்சாகம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: எதிர்பாராத லாபம் வந்து திக்குமுக்காட வைக்கும். தந்தை நலமடைவார்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: தாமதித்துக் கொண்டிருந்த நன்மை இன்று தானாக நடைபெறும்.
ரோகிணி: பொறுமையால் வெல்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு உண்டு.
மிருகசீரிடம் 1,2: சமீபத்தில் ஏற்பட்டிருந்த தொல்லை ஒன்று நீங்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமை பலப்படும். மகிழ்ச்சி கூடும்.
திருவாதிரை: பல வகைகளில் நன்மை அளிக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும்.
புனர்பூசம் 1,2,3: அகங்காரம் தலைதுாக்காமல் பணிவாக இருப்பது நல்லது.
கடகம்:
புனர்பூசம் 4: வீட்டில் நடக்கும் சுபநிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூசம்: நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆயில்யம்: மன நிம்மதி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
சிம்மம்:
மகம்: பல காலத்திட்டம் ஒன்று நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்
பூரம்: சகோதரர்களால் நன்மை உண்டு. மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் லாபம் அதிகரித்து சந்தோஷம் தரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: குடும்பத்தினருடன் இன்று உற்சாகமாகப் பொழுது போகும்
அஸ்தம்: குழந்தைகள் பற்றிய கற்பனைக் கவலைகள் வேண்டாம்.
சித்திரை 1,2: பல நாளாக விரும்பிய வெளிநாட்டுப் பணி வந்து மகிழ்விக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: எதிர்பாராத நன்மை வரும். உறவினரால் ஆதாயம் உண்டு.
சுவாதி: செலவுகள் அதிகரிக்கும். கருணை எண்ணம் வரும்.
விசாகம் 1,2,3: நிம்மதி உண்டு. பேச்சில் இரட்டிப்பு கவனம் தேவை.
விருச்சிகம்:
விசாகம் 4: உங்களது பேச்சில் கவர்ச்சி அம்சம் கூடும். நட்பு வட்டம் விரியும்.
அனுஷம்: எதிர்பாராத வேலை வாய்ப்பு வரும். அதை உடனே ஏற்றுக்கொள்ளுங்கள்.
கேட்டை: நம்ப வேண்டியவர்களை நம்பாமல் சிரமப்பட வேண்டாம்.
தனுசு:
மூலம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி நன்மை காணுங்கள்.
பூராடம்: கூடுதல் வருமானத்திற்கு புதிய வழியை கண்டுபிடிப்பீர்கள்.
உத்திராடம் 1: நெருங்கியவரிடம் உங்களது கோபத்தை காட்டி சிரமப்படுத்தாதீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தினரின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம்: தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: தாயாருக்கு உங்களால் சிரமம் வராதபடி கவனமாக இருங்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வெளிநாட்டில் இருந்து வருமானம் வர வாய்ப்பு உள்ளது.
சதயம்: குழந்தைகளால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை அவர்களே நீக்குவார்கள்.
பூரட்டாதி 1,2,3: விளையாட்டாகக்கூட யாருக்கும் தீமை செய்ய வேண்டாம்.
மீனம்:
பூரட்டாதி 4: உங்களின் செயல் காரணமாக பிரிந்த குடும்பங்கள் இணையும்.
உத்திரட்டாதி: பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ரேவதி: குழந்தைகள் முன்னேறுவர். நண்பரின் செயல் நன்மை அளிக்கும்.