ஜயத் ஜயசூரியவிற்கு தடை விதிக்குமாறு பிரித்தானியாவில் கோரிக்கை!

Mayoorikka
4 years ago
 ஜயத் ஜயசூரியவிற்கு தடை விதிக்குமாறு பிரித்தானியாவில் கோரிக்கை!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவுக்கு பிரித்தானியா தடைவிதிப்பதற்கு இது சரியான நேரம் என கோரப்பட்டு புதிய ஆவணப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
 ஸ்ரீலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்களை ஏற்கனவே ஆவண வடிவில் வெளியிட்ட பிரித்தானிய இயக்குநர் கலம் மக்கரேயும் பிரபல பிரித்தானிய ஊடகர் பிரான்சிஸ் ஹரிசனும் இணைந்து இந்த குறுகிய ஆவணப்பதிவை உருவாக்கியுள்ளனர்.
 
ஓலி விவரணம் ஏதும் இல்லாமல் ஆங்கில அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இந்த ஆவணத்தில் 2009 இல் இடம்பெற்ற சில குருரங்கள் தொடர்பான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.
 
ஜெனரல் ஜெகத் ஜயசூரியா 2007ஆம் ஆண்டு, வன்னியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கட்ட பின்னர் தமிழ்மக்கள் மீது பல தாக்குதல்களும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளும்  சரணடைந்வர்கள் கொல்லப்பட்ட குருரங்களும் மக்களின் துரத்தியடிப்புகளும் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4