நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Prabha Praneetha
4 years ago
நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு  முக்கிய அறிவித்தல்

ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 7,200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் நிலுவையாகவுள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

27 இலட்சத்தி 50,000 பேருக்கு மாதந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடிநீரை வழங்குகிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,100 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவைக் கட்டண தொகையை செலுத்தாமையினால், டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7,200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4