இலங்கையில் பரவிவரும் புதிய வைரஸ் காய்ச்சல்!

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில்  பரவிவரும் புதிய வைரஸ் காய்ச்சல்!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மேலதிகமாக நாட்டில் மற்றுமொரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அந்தச் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒமிக்ரொன் மற்றும் புதிய கொரோனா திரிபிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 05 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபுணர் குழுவினூடன முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை அடுத்தே இந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலாசனைகளை எதிர்வரும் சில தினங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4