ரஞ்சனுக்காக காத்திருக்கும் சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவண இறுதி அறிக்கை!

#SriLanka
Nila
4 years ago
ரஞ்சனுக்காக காத்திருக்கும் சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவண இறுதி அறிக்கை!

சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்இறுதி அறிக்கை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) இறுதி அறிக்கை, சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் இறுதி செய்யப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், ரஞ்சன் ராமநாயக்கவிடம் சட்டத்தரணிகள் மூலமாக வாக்குமூலமொன்றை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கால்டெரா தெரிவித்தார்.

இதேவேளை சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையர்களான நிரூபமா ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பில் சாட்சியங்களை வழங்க ரஞ்சன் ராமநாயக்க தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4