பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள்: நீதி வேண்டி மனைவி தலைமுடி காணிக்கை! (photo)

Prabha Praneetha
4 years ago
பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள்: நீதி வேண்டி மனைவி தலைமுடி காணிக்கை! (photo)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தனது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ள காளி கோவிலில், இன்று காலை விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதன்பின்பு தனது தலைமுடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டார்.

அவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4