மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

Prabha Praneetha
4 years ago
மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பாக இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமையால் நீண்டகால மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 2016ஆம் ஆண்டுடே இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என தமது ஆணைக்குழு எச்சரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4