ரயில் சேவையிலும் சிக்கல் ஏற்படும்!

Mayoorikka
4 years ago
ரயில் சேவையிலும் சிக்கல் ஏற்படும்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்துக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்காவிடின் ரயில் சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரயில் திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் வரையான எரிபொருள் இருப்பு உள்ள போதிலும், அது தற்போது மூன்றரை இலட்சம் லீற்றர் ஆக குறைந்துள்ளதாக  ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே தெரிவித்துள்ளார். 

ரயில்கள் முறையான இயங்கினால் நாளொன்றுக்கு 100,000 லிட்டர் எரிபொருளை செலவழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருதானை ரயில்  ஊழியர் சங்க காரியாலயத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4