இசைநிகழ்ச்சி பார்வையிடச் சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம்: ஒருவர் பலி! இருவர் கவலைக்கிடம்

Prathees
4 years ago
இசைநிகழ்ச்சி பார்வையிடச் சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம்: ஒருவர் பலி! இருவர் கவலைக்கிடம்

புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடிய 6வயது தூண் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கல்லடிய சந்தியில்  23ம் திகதி இரவு கலையரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்ற மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார்  சைக்களில் பயணித்த மூவர்  ஆனமடுவில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் புத்தளம்இ சின்ன நாகவில்லுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆர். எம். சுனில் சாந்த குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ புத்தளம் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4