பூசை செய்வதற்காக சென்ற நபர் பூசாரியின் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவு

Prathees
4 years ago
பூசை செய்வதற்காக சென்ற நபர் பூசாரியின் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவு

பேராதனை பிரதேசத்தில் உள்ள பிரபல தேவாலயத்தில் பூஜை செய்வதற்காக கொழும்பில் இருந்து வந்த நபருடன் பூசாரியும்  அவரது கூட்டாளியும் உறங்கியுள்ளனர்.

மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது கொழும்பில் இருந்து வந்தவர் லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

உதவி கோரி பேராதனை பொலிஸில்  பூசாரி முறைப்பாடு செய்துள்ளார்.

சுமார் 120,000 ரூபாய் பணமும்,  11 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 55,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்  அறிவுறுத்தலின் பேரில் பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜித விஜேகோன் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4