சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது

Keerthi
4 years ago
சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே, 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவலா, பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4