26.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
26.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்:
அசுவினி: எதிர்பாராத வேகத்தில் சந்தோஷம் அளிக்கும் விஷயம் நடக்கும்.
பரணி: எதிர்காலம் பற்றிய கவலை ஒன்று நீங்கும். மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: அரசாங்க நன்மைக்காக முனைப்பாக முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்பாராத நன்மை ஒன்று வந்து குடும்பதை மகிழ்விக்கும்.
ரோகிணி: எதிர்பார்த்த வங்கி கடன் கிடைத்து புதிய முயற்சியை துவங்குவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: இன்று உங்களுக்கு சந்தோஷமும் கோபமும் ஒருசேர வரும்.
திருவாதிரை: பணியாளர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கு வழி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: புண்ணியச் செயலில் ஈடுபடுவதால் மன அமைதி வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பல நாள் கழித்து மனதில் நிம்மதியும், அமைதியும் நிலவும்.
பூசம்: பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆயில்யம்: நீண்ட காலமாக கஷ்டப்படுத்திய சிரமம் இன்று நீங்கும்.

சிம்மம்: 
மகம்: பழைய தவறுகளை மாற்றிக் கொள்ளும் செயல்களை செய்வீர்கள்.
பூரம்: முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் மேம்படும். கவலை தீரும்.
உத்திரம் 1: வாழ்க்கைத்துணைக்கு வெற்றியும் லாபமும் வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: இது வரை மனதில் இருந்த பயத்தை நண்பர் நீக்குவார்.
அஸ்தம்: வீண் அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பப் பிரச்னை தீரும்.
சித்திரை 1,2: பணியாளர்களுக்கு போராடி நன்மை அடைந்த நிலை மாறும்.

துலாம்: 
சித்திரை 3,4: பணியில் சிறு சாதனை செய்வதால் உங்களை நிறுவனம் பாராட்டும்.
சுவாதி: மனதை வாட்டிய பயம் தீரும். பேச்சில் கவனம் தேவை.
விசாகம் 1,2,3: வலிய வரும் பிரச்னைகளை வென்று நிம்மதி பெறுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சலிப்பு ஏற்படுத்திய விஷயத்திற்கு இன்று தீர்வு காண்பீர்கள்.
அனுஷம்: நீண்ட காலப் பகை ஒன்று முடிவுக்கு வருவதால் துயர் நீங்கும்.
கேட்டை: உங்களின் சாதனை காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும்.

தனுசு: 
மூலம்: மனதில் மகிழ்ச்சி நிலவும். புதிய நட்பு அறிமுகமாகும்.
பூராடம்: பிறரிடம் விட்டுக்கொடுத்துச் சென்று வாழ்த்துப் பெறுவீர்கள்.
உத்திராடம் 1: பேச்சினால் யாரையும் புண்படுத்தாதபடி கவனமாக இருங்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு உங்களை உயர வைக்கும்.
திருவோணம்: குடும்பம் விரிவாகும். பகையான இருவரை இணைத்து வைப்பீர்கள்.
அவிட்டம் 1,2: இன்று நல்லதே நடக்கும். தந்தை வழி உறவினர் சந்திப்பு உண்டு.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சகபணியாளர்களுக்கு உதவி செய்து அவர்களை நெகிழ வைப்பீர்கள்.
சதயம்: குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: முன்னேறிச் செல்வதற்கான முயற்சியில் மனம் குவியுங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய செலவு ஒன்று எதிர்பாராதபடி வரும். பேச்சில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: வயதானோருக்கு நன்மை வரும். புதிய வீடு வாங்குவீர்கள்.
ரேவதி: பழி ஏற்படுத்தும் செயல் எதையும் செய்துவிட வேண்டாம்.