மேலும் தாமதமாகும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள்

Prathees
4 years ago
மேலும் தாமதமாகும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (27) முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நீண்ட கால ஒப்பந்தத்தில் உள்ள சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல், கடந்த 24ம் திகதி இலங்கைக்கு வரவிருந்தது.

இந்த கப்பல் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4