காதல் விவகாரம்: இளைஞனும் 16வயது  மாணவியும் சடலமாக மீட்பு

Prathees
4 years ago
காதல் விவகாரம்: இளைஞனும் 16வயது  மாணவியும் சடலமாக மீட்பு

கரந்தெனிய பிரதேசத்தின் பிஹிம்பிய மலைப் பிரதேசத்தில் உள்ள கறுவா நிலத்தில் பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 20 வயது இளைஞன், 16 வயது  மாணவியின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தூக்கில் தொங்கிய சிறுமியின் உடல் பலா மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் தரையில்  இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4