தூதரகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதமர் மஹிந்த

Prathees
4 years ago
தூதரகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதமர் மஹிந்த

இலங்கை தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று (25) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர உறவுகள் குறித்து பிரதமர் மற்றும் தூதர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இன்று (26) நடைபெறவுள்ள சர்வதேச சுங்க தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு இலங்கை சுங்கத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதுடன் சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4