மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைவதாக மின்சார சபை அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைவதாக மின்சார சபை அறிவிப்பு

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் என்பன இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முற்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் எண்ணெய் இன்றைய தினம் கிடைக்காவிடின், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4