ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் அறிக்கையிடலில் சிறிலங்காவிற்கு பாதக நிலை!

Mayoorikka
4 years ago
ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் அறிக்கையிடலில் சிறிலங்காவிற்கு பாதக நிலை!

ஆனைத்துலக  ரீதியில் நாடுகளின் ஊழல் முறைகேடுகளை அறிக்கையிடும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் அறிக்கையிடலில் சிறிலங்கா மீண்டும் பாதக நிலையை பெற்றுள்ளது .

2021ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு சுட்டியின் பிரகாரம் சிறிலங்காவுக்கு முன்னைய வருடத்தை விட ஒரு புள்ளி குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் மதிப்பாய்வு சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகளின் பொதுத்துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

குறித்த மதிப்பாய்வு சுட்டியில், புள்ளி வழங்கப்படும் முறையில் 0 என்பது கூடிய ஊழல் நிலையையும் 100 என்பது ஊழலற்ற தூய்மையான நிலையையும் சுட்டிக்காட்டுகின்றது.

தரவரிசையின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு 94ஆம் இடத்திலிருந்து இலங்கை, 2021ஆம் ஆண்டு 102ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அதிகபட்சமாக 2012ஆம் ஆண்டு 40 புள்ளிகளை பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4