மாணவியை கத்தியால் குத்திய சந்தேக நபர் கைது!

Prathees
4 years ago
மாணவியை கத்தியால் குத்திய சந்தேக நபர் கைது!

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவி ஒருவரை கத்தியால் குத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டன.

காதல் முறிவு காரணமாக மாணவி கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லபுதுவ உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சைக்கு தோற்றிய மாணவியை தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி தற்போது காலி கராபிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில்இ அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4