தென்னிலங்கையில் பிரபல போதைப்பொருள்  கடத்தல்காரர் கைது

Prathees
4 years ago
தென்னிலங்கையில் பிரபல போதைப்பொருள்  கடத்தல்காரர் கைது

தங்காலையில் விசேட அதிரடிப்படையினர் குழுவினால் நேற்று (25) பிற்பகல் டிக்வெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 25 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளில் சந்தேகநபர் தென் மாகாணத்தில் சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரி என தெரியவந்துள்ளது.

தென் மாகாணத்தில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தும் துபாய் நாட்டில்  மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ஹரக் கட்டாவின் நடவடிக்கையின் முக்கிய சந்தேக நபராகவும் குறித்த சந்தேக நபர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் டிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குளியலறையில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிகமஇ டிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பழைய சுற்றுலா விடுதியொன்று பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் அதன் பாதுகாவலராக கடமையாற்றிய போதே இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.

இவர் தென் மாகாணம் முழுவதும் போதைப் பொருட்களை விநியோகித்துள்ளதாகவும்இ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4