27.01.2022 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பேச்சிலும் செயலிலும் கவனமாயிருந்தால் இனிய நாள்.
பரணி: எதிர்பாராத பணவரவு உண்டு. நல்ல செய்திகள் தேடி வரும்.
கார்த்திகை 1: மின்சார சாதனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நாள்.
ரோகிணி: வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உங்களின் புகழ் கூடும்.
மிருகசீரிடம் 1,2: ஆசை நிறைவேறும். லாபம் கூடும். குடும்பம் மகிழும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: மூத்த சகோதரர், சகோதரியின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: நீங்கள் செய்யும் செயல்கள் சிறப்படைந்து நற்பலன் தரும்.
புனர்பூசம் 1,2,3: அலுவலக நண்பர்களால் ஏற்பட்ட கஷ்டம் நீங்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: எதிர்பாராத சுபச்செலவு வரும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
பூசம்: பணியில் கவனமாக இருக்கவும். பாவச்செயல்களைத் தவிர்க்கவும்.
ஆயில்யம்: பேச்சுவார்த்தைகள் வெற்றியைத் தரும். பழிக்கு அஞ்சுங்கள்.
சிம்மம்:
மகம்: பதவி உயர்வு கிடைக்கும். பணிவாகச் செயல்பட்டு வெல்வீர்கள்.
பூரம்: எதிர்பாராத பண வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.
உத்திரம் 1: அதிர்ஷ்டமான நாள். வெளியூர் பயணங்கள் உண்டாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வெளிநாட்டுத் தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தை தரும்.
அஸ்தம்: நிதி செயல்பாட்டிலும், பணம் கையாளும்போதும் கவனம் தேவை.
சித்திரை 1,2: உடலில் இருந்த அசதி நீங்கும். பெரியோரின் துணை உண்டு.
துலாம்:
சித்திரை 3,4: உங்களின் செல்வாக்கு கூடும். குடும்பத்தை கவனிப்பீர்கள்.
சுவாதி: பணியாளர்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
விசாகம் 1,2,3: வார்த்தைகளால் யாருக்கும் காயம் உண்டாக்க வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம் 4: பணியாளர்கள் மன திடத்துடன் தடைகளை எதிர்கொள்வீர்கள்.
அனுஷம்: சுபச்செலவுகள் வரும். எதிர்பாராத பண வரவு உண்டு
கேட்டை: பொறுமையுடன் காத்திருந்த விஷயம் இன்று நல்லபடியாக முடியும்.
தனுசு:
மூலம்: புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சோம்பல் வேண்டாம்.
பூராடம்: தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். செயலில் கவனம் தேவை.
உத்திராடம் 1: அதிக உழைப்பினால் பணி, தொழில் சிறப்படையும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: முயற்சியை கூட்டுவதால் உங்களது செயல்கள் சிறப்படையும்.
திருவோணம்: குடும்ப நல்லுறவு நீடிக்கும். பெண்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: ஆன்மிகத் திருத்தலத்துக்கு செல்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: தந்தைக்கும், குழந்தைகளுக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.
சதயம்: கற்பனை குழப்பத்தை தவிர்க்கவும். குடும்பம் சிறப்படையும்.
பூரட்டாதி 1,2,3: பகை கொண்ட உறவினர்கள் உங்களால் இணைவர்.
மீனம்:
பூரட்டாதி 4: எதிர்பாலினத்தினரால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.
உத்திரட்டாதி: மற்றவர் பொருளைக் கையாள்கையில் கவனம் தேவை.
ரேவதி: வாழ்க்கைக்கு உதவக்கூடிய புதிய விஷயங்களை கற்பீர்கள்.