சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு

Prabha Praneetha
4 years ago
சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு

சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான முக்கிய கூட்டமொன்று ராஜகிரியவிலுள்ள பசுமை வியசாய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் செயலாளர் டீஎம்எல்டீ பண்டாரநாயக்க, பசுமை விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்என் ரணசிங்க, பசுமை விவசாய இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மஹேஷ் கம்மன்பில, விவசாய திணைக்கள பணிப்பாளர் கலாநிதி எஸ்எச்எஸ் அஜந்த டி சில்வா, கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஏஎச்எம்எல் அபேரத்ன, தேசிய கமத்தொழில் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே, இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் வழங்கல் பிரிவின் சிரேஷ்ட கண்காணிப்பாளர் மேஜர் ஜெனரல் சமரகோன், பசுமை விவசாயத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் மேஜர் (ஓய்வு) விஜித வெலிகல மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி கலந்துரையாடலின் போது உயிரியல் மற்றும் சேதன பசளை உற்பத்தி வழங்குனர்களால் முன்மொழியப்பட்ட மாவட்ட அடிப்படையினலான செயன்முறைகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டதோடு, சிறுபோகத்திற்கான வீதி வரைப்படம் தொடர்பிலும் கேள்வி மனு அறிவிப்புக்கள் மற்றும் சிறந்த வகையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது, சேதன பசளை உற்பத்தியாளர் தங்கள் உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சிக்கல் தொடர்பில் எடுத்துரைத் திருந்ததோடு, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அஜந்த டி சில்வா உயிரியல் மற்றும் சேதன பசளை உற்பத்தியை மேற்கொள்ளும் தரப்புக்களை சரியாக அடையாளம் கண்டமைக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இராணுவம் ஒருங்கிணைப்பு முயற்சிகள் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

முன்னைய கூட்டங்களில் ஆலோசித்ததை போன்று சிறுபோக உற்பத்தி தொடர்பில் தரை மட்டத்தில் சாத்தியமான முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில், அவற்றை செயற்படுத்தும் விவசாய மற்றும் கமநல அதிகாரிகளை தெளிவூட்ட வேண்டியது அவசியம் எனவும், 2022 சிறுபோக விளைச்சளுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைபடங்களுக்கமைய செயற்படும் பட்சத்தில் சிறந்த பலன்களை காணலாம் என்றும் அதற்காக அதிகாரிகளால் தரைமட்டத்தில் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவோருக்கு தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

மேலும் உற்பத்திச் செயற்பாடுகளின் தரம் மற்றும் அவசியமான தரநிலைகளை பேணுதல் தொடர்பில் முப்படைகளிலும் உள்ள நிபுணர்களினால் விளக்கமளிக்கப்படுதல் வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதியவர்கள் எதிர்பார்ப்பதாகவும், சாத்தியமற்றது எதுவுமில்லை என்பதால் தற்போது நாம் இருக்கின்ற நிலைமைகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான முன்னோடிக் கள செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4