இலங்கை தனியார் துறையினருக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?

#SriLanka
Nila
4 years ago
இலங்கை தனியார் துறையினருக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்கும் வகையில்  தீர்மானம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தொழிலமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தலைமையில், தொழிற்சங்கங்கள், தனியார்துறை முதலாளிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தொழில் ஆணையாளர் நாயகமான பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

 இந்தக் கலந்துரையாடலின் போது,தொழிற்சங்கங்கள் 5,000 ரூபா கொடுப்பனவு அவர்களுக்குப் போதுமானதாக இல்லையெனவும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் உரிமையாளர்கள் இந்த நேரத்தில் அதனை வழங்க முடியாதெனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இந்த அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய அறிக்கை இறுதித் தீர்மானத்துக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4