இலங்கையில் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை !

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் துவிச்சக்கர வண்டி  பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை !

துவிச்சக்கர வண்டி (சைக்கிள்) பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சைக்கிளில் பயணிக்கும் அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

காற்று மாசைக் குறைக்கவும் நேர விரயத்தைத் தடுக்கவும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது ஒரு வாகனம் ஒன்றுக்கு கிலோ மீற்றருக்கு 103.56 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் சைக்கிளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236 ரூபாயை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், இதன்மூலம் அரசாங்கத்துக்கு 339 ரூபாய் இலாபத்தை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4