கோர விபத்தில் இளைஞன் பலி: முல்லைத்தீவில் சம்பவம்

Mayoorikka
4 years ago
கோர விபத்தில் இளைஞன் பலி: முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம்  பகுதியை சேர்ந்த  ரவீந்திர நிக்கசீல(47) என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ்(28) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற  உழவு இயந்திரத்தில்  மோதி விபத்து இடம்பெற்றுள்ளது 

விபத்தில் உயிரிழந்தவரின்  சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு  எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்  உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகள்  பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்ன நாயக தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4