இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட பிரதான நகரம்?

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட பிரதான நகரம்?

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை தேர்தல் தொகுதியிலுள்ள “இம்புல்பே” பிரதேசத்தின் பெயரை மாற்றுவதற்கு இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இம்புல்பே பிரதேசம் இனி “பெலிஹுல்ஒய” என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாகாண ஆளுநர் டிக்கிரி கெப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்புல்பே பிரதேசத்தை சுற்றுலா தளமாக மாற்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைக்கும் நோக்கிலேயே, இந்த பிரதேசத்தின் பெயர் “பெலிஹுல்ஒய” என மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்புல்பே பிரதேசத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும், இனி பெலிஹுல்ஒய என்றே அழைக்கப்படவுள்ளது.

“இம்புல்பே” பிரதேச சபை, பிரதேச செயலகம், விவசாய சேவை மத்திய நிலையம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் இனி, பெலிஹுல்ஒய என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4