டயகமவில் தீ விபத்து: வீடு முற்றாக எரிந்து நாசம்

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
டயகமவில் தீ விபத்து: வீடு முற்றாக எரிந்து நாசம்

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் நேற்றிரவு (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தொடர் லயக்குடியிருப்பில்  வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இதனால் இந்த வீட்டில் இருந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், துணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை: பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4