28.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
28.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நீண்ட நாளாக இருந்த மனஅழுத்தம் இன்று முற்றிலுமாக தீரும்.
பரணி: பேச்சிலும் செயலிலும் கவனமாயிருந்தால் பிரச்னையற்ற நாள்.
கார்த்திகை 1: தொழில் மந்தமாக இருக்கும். எதிரிகளின் தொல்லை குறையும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குடும்பத்தின் செயல்கள் உற்சாகமூட்டும். கலகலப்பான நாள்.
ரோகிணி: பரபரப்பான நாள். நீங்கள் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: தொலை துாரத்திலுள்ள உறவினரின் செயல் மகிழ்ச்சி தரும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: அரசாங்க நன்மை உண்டாகும். நிதிக் கவலை நீங்கும்.
திருவாதிரை: குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். எதிர்பாராத பண வரவு வரும்.
புனர்பூசம் 1,2,3: தாய் மாமனால் நன்மை அதிகரிக்கும். கலகலப்பான நாள்.

கடகம்: 
புனர்பூசம் 4: உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
பூசம்: பங்குச் சந்தை முதலீடுகளைச் சிறிது குறைத்துக் கொள்ளுங்கள்.
ஆயில்யம்: குடும்பம் மகிழும். எதிர்பாராத யோகம் உண்டாகி சந்தோஷமளிக்கும்.

சிம்மம்: 
மகம்: பணியிடத்தில் சகபணியாளர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.
பூரம்: நண்பர்களுடன் நல்லுறவு நீடிக்கும். வாழ்க்கைத்துணை உதவுவார்.
உத்திரம் 1: மன தைரியம் கூடும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்

கன்னி: 
உத்திரம் 2,3,4: போட்டிகளில் வெற்றியும் பரிசும் கிடைத்து மகிழ்விக்கும்.
அஸ்தம்: நட்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும். முதலீடு அதிகமாகும்.
சித்திரை 1,2: வாகன யோகம் உண்டாகும். உங்களின் முயற்சி வெல்லும்.

துலாம்: 
சித்திரை 3,4: உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். உற்சாகம் உயரும்.
சுவாதி: தொழில், வியாபாரம் சிறப்படையும். மன சஞ்சலம் நீங்கும்
விசாகம் 1,2,3: பேச்சில் நிதானம் தேவை. பிறருடன் விட்டுக்கொடுத்து செல்லவும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பணியிடத்தில் விரோதப் போக்கை கடைபிடிக்க வேண்டாம்
அனுஷம்: பங்குச்சந்தை லாபம் தரும். தாயாருக்கு எதிர்பாராத நன்மை வரும்.
கேட்டை: உங்களது செயல்கள் சிறப்படையும். வீடு கட்டும் யோகம் வரும்.

தனுசு: 
மூலம்: நட்பு வட்டம் விரியும். வெளி மனிதர்களால் நலம் பெறுவீர்கள்.
பூராடம்: குதுாகலமான நாள். எதிர்பாராத பாராட்டும், பரிசும் கிடைக்கும்.
உத்திராடம் 1: எதிர்பாராத பயணம் வரலாம். முயற்சியைத் தீவிரமாக்குவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சொத்து வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
திருவோணம்: குழந்தைகளின் செயல்களால் உற்சாகம் உண்டாகும்.
அவிட்டம் 1,2: தந்தைக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பயம் நீங்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உறவினர் சந்திப்பு உண்டு. நட்பு ரீதியாக உற்சாகமான நாள்.
சதயம்: எதிலும் மந்த நிலை இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: பழைய பிரச்னை ஒன்றை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: வீடு, நிலம் வாங்கும் எண்ணம் இன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி: உங்களது நகைகளை யாருக்கும் கடனாக கொடுக்க வேண்டாம்.
ரேவதி: உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். வேலைப்பளு குறையும்.