சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை! ஆலோசனை தீவிரம்

Mayoorikka
4 years ago
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை! ஆலோசனை தீவிரம்

சர்வதேச பிணைமுறி கடனை திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்துவருவதாக ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்துவருவதாக லண்டன் பினான்சியல் டைம்ஸிற்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஜஸ கூறியுள்ளார்.

மீண்டும் செலுத்த வேண்டிய சர்வதேச பிணைமுறி பத்திரங்கள் உள்ளன. எனவே நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்திவருகின்றோம்.அதனை விட எங்களிடம் கடன் வழங்கியவர்களும் உள்ளனர். அவர்களின் கடன்களை நாம் மீள செலுத்த வேண்டும். அதனால் சில விடயங்களில் மாற்றங்களை செய்ய முடியுமா என்பது  குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் என பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் குறித்தும் அரசாங்கம் சிந்திக்கும் எனவும் அனைத்து விடயங்கள் தொடர்பான பேச்சுக்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெறுவதற்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4