காணாமல் போன கிளி மீண்டும் வந்தது!

Mayoorikka
4 years ago
காணாமல் போன கிளி மீண்டும் வந்தது!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, நீல நிறத்திலான கிளி கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.

களுபோவில பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர், குறித்த கிளி பறந்து வந்ததாகவும், உரிமையாளர் எவரும் வருகை  தராமையினால் இதுவரை தாம் அந்த கிளியை பராமரித்து வந்ததாகவும் களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த கிளி காணாமல் போனமை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த கிளி மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல் போன கிளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்ததாகவும் குறித்த தம்பதியினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த கிளி கிடைக்கப் பெற்றதை அடுத்து, தெஹிவளை பொலிஸாருக்கு, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4