மாங்காய் இஞ்சி குழம்பு வைப்பது எப்படி?

#Cooking #Fruits #curry
மாங்காய் இஞ்சி குழம்பு வைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் - 10
  • நறுக்கிய தக்காளி - 1
  • பூண்டுப்பல் - 8
  • புளிகரைசல் - 1 கப்
  • வடகம் - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் -1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
  • எண்ணெயில் வதக்கி அரைக்க
  • தனியா - 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 6
  • துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும். 
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் + வடகம் + கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் + தக்காளி + பூண்டுப்பல் + அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின் புளி கரைசல் + உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

மேலும் சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4