இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஏர்

ஏர் பிடிப்பவன் இல்லையேல்
என்றோ அழிந்திருக்கும்
இந்த உலகம் பட்டினியால்..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பணம்

நாம் முதுமை அடைந்தால் பிள்ளைகள்
நம்மை பராமரிக்க இரண்டே காரணங்கள்
தான் ஒன்று நாம் சேர்த்து வைத்த பணம்
மற்றொன்று
நாம் அவர்களை வளர்த்த விதம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நேர்மை

ஒரு காலத்தில்
நேர்மை தவறாமல்
வாழ்ந்தவர்களைக்
கண்டோம்!
ஆனால் இப்போது 
நேரத்திற்கு தகுந்தாற் போல்
வாழ்பவர்களையே

அதிகமாக காண்கிறோம்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உதவி

ஓடி ஓடி உதவி
செய்யும் வரை 
தான்
அனைவராலும் 
மதிக்கப்படுவாய்
ஒரு முறை
மறுத்துப்பார்
அடுத்த நொடியே
அடியோடு
மறக்கப்படுவாய்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-கடவுள்

கவலை இல்லாத வாழ்வை கடவுள்
யாருக்கும் கொடுப்பதில்லை.
ஆனால் அந்த கவலையை கடந்து
வரும் இதயத்தை அனைவருக்கும்
கொடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4