29.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
29.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: அலுவலகத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்து மகிழ்விக்கும்.
பரணி: லாபம் வரும். ஆரோக்கியம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
கார்த்திகை 1: யாரிடமும் அநாவசியப் பகை பாராட்ட வேண்டாம்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சாதனையால் சந்தோஷம் வரும். பணிப்பளு குறையும்.
ரோகிணி: கற்பனை பயங்களால் மனதில் நிம்மதி குறைய வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: பயத்தை உதறுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்கவும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத தொகை கிடைக்கும். கோபம் குறையும்.
திருவாதிரை: செல்வமும், சேமிப்பும் அதிகரிக்கும். கவலை தீரும்.
புனர்பூசம் 1,2,3: தந்தை வழி உறவினரிடம் இருந்து பணம் கிடைக்கும்

கடகம்: 
புனர்பூசம் 4: புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூசம்: தாயாரின் பணியில் மாற்றம் வரும். மாணவர்களுக்கு நற்செய்தி உண்டு.
ஆயில்யம்: தேவையற்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்: 
மகம்: தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
பூரம்: மகிழ்ச்சியான நாள். உழைப்பினால் லாபம் கூடுதலாக வரும்.
உத்திரம் 1: அக்கம்பக்கத்தினரால் இருந்து வந்த தொல்லை நீங்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.
அஸ்தம்: உழைப்பினால் நன்மை உண்டாகும். வியாபாரம் விருத்தியாகும்.
சித்திரை 1,2: விரக்தி எண்ணம் நீங்குவதற்கு நல்லோர் உங்களுக்கு உதவுவர்.

துலாம்:
சித்திரை 3,4: பெரியோர், உயர் அதிகாரிகளின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.
சுவாதி: வீடு, நிலம் போன்ற வகையில் அதிக முதலீடு செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: வீண் பேச்சினையும் கோபத்தையும் தவிர்த்தால் நல்லது.

விருச்சிகம்: 
விசாகம் 4: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயத்தை உதறுங்கள்.
அனுஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை: புத்திக் கூர்மை அதிகரிக்கும். மனநிறைவும், தைரியமும் கூடும்.

தனுசு: 
மூலம்: நண்பர்களிடம் சச்சரவினை தவிர்க்கவும். பழிக்கு அஞ்ச வேண்டும்.
பூராடம்: தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தாயின் அன்பை பெறுவீர்.
உத்திராடம் 1: மனதில் கற்பனை கவலைகள் தோன்ற அனுமதிக்காதீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: எடுத்துக் கொண்ட வேலைகள் நிதானமாகவே முடியும்.
திருவோணம்: பொருளாதாரத் தேவைகளை முனைப்புடன் எட்டுவீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பெரியோரின் உதவி உண்டு.

கும்பம்: 
அவிட்டம் 3,4: ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பயங்கள் குறையும்.
சதயம்: புத்துணர்வு ஏற்படும். குழந்தைகள் பரிசு, பாராட்டு பெறுவார்கள்.
பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணையால் நன்மை வரும். பக்தி கூடும்.

மீனம்: 
பூரட்டாதி 4: தங்கம் வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும்.
உத்திரட்டாதி: பதவி உயர்வு கிடைக்கும். புகழ் தரும் செயலை செய்வீர்கள்.
ரேவதி: அதிகாரப் பதவியில் உள்ளோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.