இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் பீட்ருட் எப்படி வந்தது?

Prathees
4 years ago
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் பீட்ருட் எப்படி வந்தது?

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு கொள்கலன்கள் இன்று (28) சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன.

குறித்த கொள்கலன்களை இறக்குமதி செய்த வத்தளை பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுஇ அதில் இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 53,000 கிலோகிராம் உருளைக்கிழங்கு இருப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும்இ கொள்கலன்களை பரிசோதித்த போதுஇ 16,000 கிலோகிராம் பீட்ரூட் மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. 

3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பீட்ரூட் கையிருப்பு பறிமுதல் செய்யப்படுவதுடன் இறக்குமதியாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4