அல்வாய் கிழக்கு பகுதியில் குப்பை கொட்டுவதை தடைசெய்யவும்: மக்கள் வேண்டுகோள்

Mayoorikka
4 years ago
அல்வாய் கிழக்கு பகுதியில் குப்பை கொட்டுவதை தடைசெய்யவும்: மக்கள் வேண்டுகோள்

அல்வாய் கிழக்கு மாயக்கை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரும் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டுவதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் வெளியிடங்களில் இருந்து வாகனங்களின் மூலம் கழிவுப் பொருட்களை வீதியின் ஓரங்களில் கொட்டுவதினால் அப் பகுதியினுடாக பயணிப்போர் மிகுந்த சிரமங்களிற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த போது பிரதேசசபையில் அனுமதி எடுத்தே கொட்டுகின்றோம் என குப்பை போடுவோரினால் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தனியாரின் காணிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு பிரதேச சபை அனுமதி கொடுக்குமா என அப்பகுதி மக்களினால் கேள்வி எழுப்பப்படுகின்றது.

எனவே கரவெட்டி பிரதேசபை இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4