மட்டக்களப்பிற்கு வரும் ஆபத்து!

Mayoorikka
4 years ago
மட்டக்களப்பிற்கு வரும் ஆபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு கம்பஹா, தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100க்கு மேற்பட்ட நோயாளிகளும் 20 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் 40 க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் இந்த அபாயத்தை உணர்ந்தவர்களாக சுகாதார  நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4