பெப்ரவரியிலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை ஆரம்பம்!

Mayoorikka
4 years ago
பெப்ரவரியிலிருந்து  புதிய சொகுசு போக்குவரத்து சேவை ஆரம்பம்!

24 தொலைதூரப் பகுதிகளில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எட்டு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட கொழும்பு – கோட்டை – பொலன்னறுவை – புலத்திசி நகரங்களுக்கு இடையிலான ரயில்கள் நேற்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4